ஆதிபராசக்தி சித்தர் பீட ஆலய குடமுழுக்கு விழா

Loading

சேலம்

சேலம் அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆலய குடமுழுக்கு விழா

சேலம் இராமகிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிககுரு அருள்மிகு சித்தர் சக்தி பீடம் திருக்குடமுழக்கு விழா இன்று காலை மருவூர் சின்னவர் அண்ணன் செந்தில் அடிகளார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவை சேலம் மருவத்தூர் சித்தர் பீட தலைவர் சக்தி அருள்மொழி சந்திரமோகன் சிறப்பாக நடத்தினார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் எம்.எல்.ஏ. மற்றும் சேலம் கோட்டை மாரியம்மன் அறங்காவலர் குழு தலைவர் SDN சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0Shares