மகளிர் தின விழா..வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!
6 total views , 1 views today
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 4ம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, வேலூர் நகர அரங்கம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தைச் சார்ந்த ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 4ம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழா, வேலூர் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சுமதி, செயற்குழு உறுப்பினர் சீதா, ஒருங்கிணைந்த வேலூர், வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சார்ந்த 60க்கும் மேற்பட்ட மகளிர்கள் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.