திருவள்ளூரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் :

Loading

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடைபெற்றது.  அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.  இதில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் தென்னரசு,  மற்றும் தேமுதிக, சார்பில் ஆனந்த், நாம்தமிழர் கட்சி சார்பில் மேகனா மற்றும் சுயேட்சைகள் என 27 பேர்  போட்டியிட்டனர். இதில் தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தவர் முடிவில் 66575  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இதனையடுத்து  ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெற்றதையடுத்து திருவள்ளூர் நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள எம்எல்ஏ., அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர்  நகர்மன்றத் தலைவர் உதயமலர் பொன் பாண்டியன், திருவள்ளூர் நகர கழக செயலாளரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன்  முன்னாள் நகர் மன்றத் தலைவர் பொன்.பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும்  கொண்டாடினர். இதில் திருவள்ளூர் நகர்மன்ற உறுப்பினர்கள் இந்திரா பரசுராமன், டி.கே.பாபு, செல்வகுமார், விஜயகுமார் லீலாவதி பன்னீர், பிரபாகரன், வசந்தி வேலாயுதம், அயூப் அலி,  நகர அவைத் தலைவர் கமலக்கண்ணன்,  கிளை செயலாளர்கள் கிள்ளிவளவன், முரளி மற்றும் திமுக நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார்,,குப்பன், மற்றும்  ஜேசிபி கேசவன்,  புட்லூர் குணசேகரன், நகர துணை செயலாளர் டி.எம்.ரவி, டி.ஆர். திலீபன், ஹரீஷ், சங்கர், ஜி.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அதே போல் திருவள்ளூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர்மன்ற உறுப்பினரும், திருவள்ளூர் நகர காங்கிரஸ் கட்சித் தலைவருமான வி.இ.ஜான் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் ரகுராமன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திருவள்ளூர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ். இளங்கோவன் வெற்றி பெற்றதை கொண்டாடினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *