இஸ்ரேல்-ஈரான் வான்வெளி மூடல்; சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்பு!
இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறி தொடர் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக ஈரான் நாடு தனது வான்வெளியை மூடியது. இது சர்வதேச விமான போக்குவரத்தை பாதித்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்ற, அங்கிருந்து வந்த விமானங்கள் பாதிக்கப்பட்டன.
அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. இதனால் இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, தற்போதைய நிலவரப்படி 15 அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவிற்கு ஈரான் யுரேனியம் செறிவூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் நேற்று அதிகாலை ஈரானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு உலை, அணு ஆராய்ச்சி அமையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப்படை தளபதிகள், ஈரான் அணு விஞ்ஞானிகள் பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாகவும், 320 பேர் காயடைந்துள்ளதாகவும் ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது. கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை அதன் ஏவுகணைகள் தாக்கியது.மேலும் இஸ்ரேல் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் அவற்றை நடுவானிலேயே தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறி தொடர் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக ஈரான் நாடு தனது வான்வெளியை மூடியது. இது சர்வதேச விமான போக்குவரத்தை பாதித்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்ற, அங்கிருந்து வந்த விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.
லண்டன் ஹீத்ரூவில் இருந்து மும்பை வந்த விமானம், நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானம் . நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த விமானம் . இதுபோல லண்டன் ஹீத்ரோவில் இருந்து டெல்லி வந்த விமானம் , வான்கூவரில் இருந்து டெல்லி வந்த விமானம், டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற விமானம் , சிகாகோவில் இருந்து டெல்லி வந்த விமானம் என 16 விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.