12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வழங்கினார்.
எதிர்வரும் பருவமழைக்கு எழும்பூர் தொகுதியில் 50 சதவீத மழை வெள்ள பாதிப்பு குறையும் என எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள
ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தமான் :-
எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினேன் என்றும் எழும்பூர் தொகுதி முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள் துரிதமாக மேற்கொண்டுள்ளோம் என்றார்.
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இந்த ஆண்டு பருவமழைக்கு எழும்பூர் தொகுதியில் 50 சதவீதம் மழை வெள்ள பாதிப்பு குறையும் என்றார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள அனுமதி கட்டணம் கேட்ட விவகாரம் தொடர்பாக விளையாட்டு துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன் என்றும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.