திருநெல்வேலி மாவட்டம் தருவை ஸ்ரீ செல்வ பால பாக்கிய சீரடி சாய்பாபா
![]()
ஓம் சாய்ராம் திருநெல்வேலி மாவட்டம் தருவை ஸ்ரீ செல்வ பால பாக்கிய சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று ஜனவரி மாதம் ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.உலக மக்கள் நன்மைக்காக ஷீரடி சாய்பாபாவிற்கு ஆயிரம் கிலோவுக்கு மேல் பழ வகைகள் கனி அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பூஜையில் சீரடி சாய் நாதர் முற்றிலும் கனி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதோடு கோமாதா மற்றும் பைரவர் சீரடி சாய் நாதனை நேரடியாக தரிசனம் செய்தது .மேலும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சீரடி சாய் நாதனின் ஆசீர்வாதங்களையும் அணு கிரகங்களையும் ஏராளமான சாய் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ செல்வ பாக்கிய சீரடி சாய்பாபா அறக்கட்டளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெய் சாய்ராம்.

