தமிழகத்தில் 14 மாணவர்கள் உயிர்பலிக்கு காரணம் நீட் தேர்வில் மத்திய அரசு காட்டிய அலட்சியம் தான் மதிமுக பொதுசெயலாளர் வைகோ காட்டம்
![]()
தமிழகத்தில் 14 மாணவர்கள் உயிர்பலிக்கு காரணம்
நீட் தேர்வில் மத்திய அரசு காட்டிய அலட்சியம் தான்
மதிமுக பொதுசெயலாளர் வைகோ காட்டம்
சென்னை, ஜன- 1
நீட் தேர்வு ரத்து செய்யாமல் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதால் 14 மாணவர்களின் உயிர்கள் தற்கொலைக்குள்ளாகி இருப்பதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்
2022 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோ , கட்சியினர் மற்றும் செய்தியாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார், அப்போது அவர் அளித்த பேட்டி:
மதிமுக தொடங்கியதில் இருந்து சிறையில் இல்லாத நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் நான் செய்தியாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம், Dஅதே போல இந்த ஆண்டும் புத்தாண்டு வாழ்த்துக்களோடு செய்தியாளர்களை சந்திக்கிறேன், இந்த சந்திப்பினால் நான் ஊக்கமும் உற்சாகமும் அடைகிறேன். தொலைநோக்கு பார்வையுடன் மேற்கொண்ட மதிமுக முடிவு,சரியானது தான் என்பதை கடந்த சட்டமன்றத்தேர்தலில் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 200 நாட்களில் பல்வேறு திட்டங்களை வழங்கி சாதனை படைத்து வருகிறது. திமுக ஆட்சியை மத்திய அரசும் வேறு வழியில்லாமல் பாராட்டியிருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றமும் கூட வாழ்த்தியிருக்கிறது, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக அரசுக்கு பாராட்டு குவிந்து வருகிறது, சமூகநீதி., தமிழ், தமிழகத்தின் முன்னேற்றம் என்ற பார்வையுடன் திமுக அரசு வெற்றி நடைபோட்டு வருகிறது,
நீதிபதி ஏகே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழு திரட்டிய தகவலின் அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேணடும் என்று சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது, அதை தமிழக ஆளுநர் ஆர்,என்,ரவி, இன்னும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை, மத்திய அரசின் அலட்சியத்தால் தான் அரியலூர் அனிதா உள்ளிட்ட 14 மாணவர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றனர். ஆனாலும் நீட் தேர்வை ரத்து செய்யாமல் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது, நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்துவதற்காக சென்ற திமுக நாடாளுமன்றக்குழுவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழகத்திற்கு என்னென்ன வகையில் பாதகம் செய்யமுடியுமோ அதையெல்லாம் மத்திய அரசு செய்து வருகிறது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜனாதிபதியை நான் சந்திப்பதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை, ஆனால் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, மருத்துவக்கல்வியில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள், நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும் என்பது மதிமுக முடிவு
தமிழக மீனவர்கள் 68 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களது விசைப்படகுகள் பறிக்கப்பட்டிருக்கின்றன, மீனவர்கள் சவுக்கால் அடிக்கப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு இருக்கின்றனர், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றும் அவர்களது படகுகள் நாட்டுடமை ஆக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் ஆனால் இது குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,
வரும் 12 ம்தேதி தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆலோசித்து முடிவு மேற்கொள்ள வேண்டும், மதிமுக தனிப்பட்ட கட்சியாக இருந்தாலும் கூட்டணி இருப்பதால் கலந்து பேசி தான் முடிவு செய்ய வேண்டும். 2024 ஆம் ஆண்டு பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளிடையே வலுவான கூட்டணி ஏற்படவில்லை என்று திருமாவளவன் தெரிவித்த கருத்து ஏற்புடையது தான், பிரதமர் மோடி வலுவான தலைவர், அமித் ஷா இரும்பு மனிதர் என்றெல்லாம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சொல்லியிருப்பது, வேறு வழியில்லாமல் கப்பம் கட்டிக்கொண்டிருந்த காரணத்தாலும் பயத்தினாலும் தான், பாராட்டுகிறார் அதனால் தான் அமித் ஷா இரும்பு மனிதர் கரும்பு மனிதர் என்றெல்லாம் ஒபிஎஸ் கூறியுள்ளார்
திமுக ஆட்சியை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பாராட்டுகிறார், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் முரண்பாடான கருத்தை தெரிவிக்கிறார், அதிமுக முன்னாள் அமைச்சர்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. மத்திய பாஜக அரசுடன் தமிழகத்தின் திமுக அரசு பணிந்து போகவில்லை, தலைநிமிர்ந்து தான் போகிறது, சாதனை மேல் சாதனை படைப்பதால் மத்திய அரசே பாராட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது, இந்தியாவிலேயே மதிக்கப்பட வேண்டிய முதல்வராக ஸ்டாலின் விளங்கி வருகிறார். தமிழகத்தில் சட்டமேலவை அமைக்கப்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம் ஆனால் அதற்கான சூழ்நிலை தமிழகத்தில் இல்லாதது போல் இருக்கிறது, துணைவேந்தர்கள் நியமனத்திலும் தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
2026 ஆம் ஆண்டு பாமக ஆட்சி அமைப்போம் என்றும் தனிக்கூட்டணி அமைப்போம் என்றும் தன்னுடைய கட்சியின் கருத்தை ராமதாஸ் கூறியிருக்கிறார், அதில் எந்த தவறுமில்லை, அது சந்தர்ப்பவாத அரசியல் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார் என்றால் அவர் தான் அங்கும் இங்கும் மாறி மாறி பேசி வருகிறார்,
இவ்வாறு அவர் கூறினார், இந்த பேட்டியின் போது வைகோவுடன் அக்கட்சியின் துணைப்பொதுசெயலாளர் மல்லை சத்யா, அமைப்பு செயலாளர் வந்தியதேவன் ஆகியோர் உடனிருந்தனர்,

