திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய ஆட்சியர் பதவியேற்பு

Loading

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக. பா. முருகேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் பொறுப்பேற்றுக்கொண்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்

திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கிறேன், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக குரோனா தடுப்பு பணிகள் மேற் கொண்ட காரணத்தால் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது, எனது முதல் பணி குரோனாதொற்றுதடுப்பு பணிகள்மட்டும் முழுமையாக கட்டுப்படுத்தி.zerocases,என்ற இலக்கை அடைவதாகும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை குரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 252 ஆக உள்ளது,அரசின்கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் முகவசம். அணிதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும், குரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள், சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், ஆன்மீக ஸ்தலமான திருவண்ணாமலை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகள் ஈர்க்கவும் நீண்ட கால திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும், அரசின் வழிகாட்டுதல் படியும்மற்றும் முதலமைச்சர் ஆலோசனைப்படி மாவட்டத்தில் வளர்ச்சிக்கான சிறப்பாக செயல்படுவேன் என்றார்.

0Shares

Leave a Reply