சர்வதேச வன தினம் கடைப்பிடிப்பு என்ற நிகழ்வு நடைபெற்றது.

Loading

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் மஞ்சம்பட்டி தொடக்கப்பள்ளியில் சர்வதேச வன  தினம் கடைபிடிப்பு  ..புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சம்பட்டி தொடக்கப் பள்ளியில்  எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை வட்டார கிளையின் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச வன தினம் கடைப்பிடிப்பு என்ற நிகழ்வு நடைபெற்றது.
 இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமை வகித்து வரவேற்றார்.
முன்னதாக நடைபெற்ற எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தில் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை பெற்றோர்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.பள்ளி மேலாண்மை குழு தலைவி ராதிகா முன்னிலை வகித்தார். ‌
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது1971 ஆம் ஆண்டில், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்  மாநாட்டின் 16 வது அமர்வு உலக வன நாள் அமைப்பதற்கு வாக்களித்தது, பின்னர், சர்வதேச வனவியல் ஆராய்ச்சி மையம் 2007 முதல் 2012 வரை ஆறு ஆண்டுகளாக உலக வன தினங்களை நடத்தியது.
இறுதியாக, நவம்பர் 28, 2012 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மார்ச் 21 ஐ சர்வதேச காடுகளின் தினமாக  கொண்டாடியது. அனைத்து மட்டங்களிலும் நடவடிக்கைகள் மற்றும் காடு வளர்ப்பு பிரச்சாரங்களை ஒழுங்கமைக்கவும் செயல்படுத்தவும் ஐ.நா பிரகடனம் அரசாங்கங்களை ஊக்குவித்தது.
அப்போதிருந்து, சர்வதேச வன தினத்தில், ஐக்கிய நாடுகளின் காடுகள் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றால் அரசாங்கங்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டின் சர்வதேச வன தினத்திற்கான கருப்பொருளாக “காடுகள் மற்றும் ஆரோக்கியம்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நீரின் தூய்மையைப் பேணுதல், காற்றைச் சுத்தப்படுத்துதல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட கார்பனைப் பிடிப்பது, உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்குதல் மற்றும் நமது நல்வாழ்வை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் காடுகள் எவ்வாறு நமது ஆரோக்கியத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என்பதை இந்த ஆண்டு சிறப்பிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது முக்கியம் மற்றும் நம் கையில் உள்ளது என்று பேசினார்.
கந்தரவக்கோட்டை அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா மரம் வளர்ப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தற்காலிக ஆசிரியர்கள் புவனேஸ்வரி , இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் நிரோஜா,லோகம்பாள், ஜெகதீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக ஆசிரியை  உமா நன்றி கூறினார்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *