திருவள்ளூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி, மே தினம் ஆகிய இரண்டு நாட்களில் மதுக்கூடங்கள் அனைத்தும் மூட வேண்டும் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Loading

திருவள்ளூர் ஏப் 24 : தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003-ன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்,கிளப்புகள்,ஹோட்டல்கள் ஆகியவற்றில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 25.04.2021 ந் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் 01.05.2021 அன்று மே தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மூடப்படவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உத்தரவை மீறி மதுக்கூடங்கள் திறப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *