தமிழ்நாடு முழுவதும் ஆறுகள் ஆக்கிரமிப்பு கண்டு கொள்ளாத மாவட்ட ஆட்சியர் கடலூர் விழுப்புரம் சேலம் தர்மபுரிதிருவண்ணாமலைஆகிய மாவட்டங்களில் ஃபென்சல் புயல் காரணமாக கனத்த மழை கொட்டி தீர்த்தது இந்த
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் டாக்டர் ஹென்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நாளும் பல வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் தங்களின் சீரிய நிர்வாகத் தலைமையின் கீழ் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆகிய நிர்வாக பொறுப்புகளில் பொறுப்பு வகித்தவர்கள் பணி மாறுதலுக்கு உள்ளாகியதால், அந்த பொறுப்புக்கு உட்பட்ட எந்த பணிகளும் நடைபெறாமல், பட்டா உள்ளிட்ட அனைத்து பணிகளும் தேக்க நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது. மேற்கண்ட பொறுப்புகளுக்கு கடந்த 01.12.2024 அன்று உரிய அலுவலர்களை நியமித்து தாங்கள் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை அவர்கள் பொறுப்பேற்காததால் இன்னும் பணி தேக்க நிலை அடைந்து கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆகவே பெருமதிப்பிற்குரிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் நலன் கருதி கனிவுடன் பரிசீலித்து, பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இதுவரை தீர்வு ஏற்படாமல் தேக்க நிலையில் உள்ள கோப்புகளை விரைந்து முடித்து தீர்வு காண்பதற்கு, போர்க்கால அடிப்படையில் போதிய அளவிற்கு கூடுதல் பொறுப்புகளில் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் உரிய அலுவலர்களை நியமித்து உடனடியாக பொறுப்பேற்பதற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து, உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட துணை செயலாளர் A.அருண்குமார் , மாலதி அருண்குமார் இவர்களின் முதல் குழந்தை A.M.லியா அருண்
சென்னை சாலிகிராமம் முழுநேர கிளை நூலகத்தில் (20.11.2024) அன்று57-வது தேசிய நூலக வார விழா மற்றும் வாசகர் வட்டம் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜென்ரல் கரியப்பா மேல்நிலைப்பள்ளி
ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ் காஷ்மீர் இளைஞர்களுக்கான கலாச்சார பரிமாற்ற முகாம் சென்னையில் தொடக்கம் PIB Chennai ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ், காஷ்மீர் இளைஞர்களுக்கான கலாச்சார பரிமாற்ற முகாம் சென்னையில் நடைபெற்றது. ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்துடன் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம், கல்வி, உணவு என பல துறைகளின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு மாநிலமும் அதனுடன் இணைந்துள்ள மாநிலத்தின் சிறப்புகளை அறிந்து கொள்ள இளைஞர் பரிமாற்ற முகாம்கள் வழி வகுக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடு- ஜம்மு காஷ்மீர் ஆகியவை ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் இணை மாநிலங்களாகும். மத்திய உள்துறை அமைச்சகம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகம், நேரு யுவகேந்திரா உடன் இணைந்து இந்த இளைஞர் பரிமாற்ற முகாம்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களைச் சேர்ந்த 132 இளைஞர்கள், சென்னையில் உள்ள இளையோர் விடுதியில் இந்த கலாச்சார பரிமாற்ற முகாம்களில் பங்கேற்றனர். இதற்கான தொடக்க விழா நவம்பர் 09 2024 அன்று சென்னை அடையாறில் உள்ள இளையோர் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென் சென்னையின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு முகாமினைத் தொடங்கி வைத்தார். இந்த முகாம் ஏழு நாள்கள் நடைபெறும். தினமும் கலாச்சார கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழாக்கள் ஆகியவை நடைபெறும். தமிழ்நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் இவர்கள் கண்டுகளிக்க உள்ளனர். கல்லூரிகளில் தேசபக்தி குறித்த கருத்தரங்குகளிலும் அவர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து அவர்கள் அறிந்துகொள்ள இந்த பரிமாற்ற முகாம் வழிவகுக்கும்
ஃபெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள்