கோவையில் ஜப்பானிய முறைப்படி கொலு கண்காட்சி

Loading

கோவை லக்ஷ்மி மில்ஸ் வளாகத்தில் ஜப்பானிய இகெபானா பாணியில் நவராத்திரி கொலு” சங்கல்பம்’ எனும் தலைப்பில் நடைபெறும் இந்த கொலு, 2 நாள் கலைக் கண்காட்சியாக நடைபெற உள்ள இதில், இந்தியா முழுவதிலும் இருந்து 21 தேவி சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
​நவராத்திரி விழாவை முன்னிட்டுத் பாரம்பரியக் கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலாச்சார நினைவுகளை ஒன்றிணைக்கும் வகையில், ‘சங்கல்பம்’ பண்பாட்டுக் கண்காட்சி கோவை லக்ஷ்மி மில்ஸ் நகர்ப்புற மையத்தில் தொடங்கியது.
தெய்வீகப் பெண்மையின் சக்தி, படைப்பாற்றல் மற்றும் மீள்திறனைக் கொண்டாடும் வகையில் இக்கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ண பரிஜாதாவின் விஜயலட்சுமி ருத்ரப்பன், ஹல்தி குங்குமத்தின் அபிஷேக் எஸ். மூர்த்தி, ஆரா டிசைனின் அபர்ணா வெங்கடேஷ் மற்றும் சரண்யா கோகினேனி ஆகியோரின் கூட்டுப் பங்களிப்பில் இக்கண்காட்சி காட்சிபடுத்த பட்டுள்ளது.
​தென்னிந்திய பாரம்பரிய சடங்குகள், மலர்க் கலைகள், கைத்தறி நெசவு, பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியின் முதன்மை அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
​ஜப்பான் நாட்டின் ‘இகெபானா’ பாணியில் புதுமையான கொலுவாக நடைபெற்ற இந்த கண்காட்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 21 தேவி சிலைகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நவராத்திரி கொலுவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஜப்பான் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற ஓக்கா மீனாட்சி தேவி மற்றும் அவரது குழுவினர் சிறப்புப் பங்காற்றி உள்ளனர். ​ஜப்பானிய பாரம்பரிய மலர் அலங்கார முறையான ‘இகெபானா’ நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீனக் கலாச்சாரமும் நமது தென்னிந்திய மரபும் இணையும் வகையில் இக்கொலு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மூங்கில்கள், இயற்கைச் செடிகள், பூக்கள் மற்றும் சாமி சிலைகளுக்கான பிரத்யேக மாலை அலங்காரங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன
0Shares