அரசினர் தொழிற்பயிற்சி ஆண்டு பட்டமளிப்பு விழா

Loading

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா : சிறப்பாக பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.கவிதா சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார் :

திருவள்ளூர் நவ 24 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், ஒண்டிகுப்பம் தேவி நகர், பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைப்பெற்ற முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவினை மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தொடங்கி வைத்து, சிறப்பாக பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கென 2025-ல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் திருவள்ளூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2026 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கான முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இப்பயிற்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழில்நுட்பவியலாளர், மின்பளுதூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு, மருத்துவ மின்னணுவியல் தொழில்நுட்ப வல்லுநர் அதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி, அதற்கான பயிற்சி காலம் 2 ஆண்டுகள். கணினி வன்பொருள் மற்றும் நெட்வொர்க் மெயின்டனன்ஸ், அதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி, அதற்கான பயிற்சி காலம் 1 ஆண்டு பயிற்சியளிக்கப்படும். குழாய்பொருத்துபவர், உலோகத்தகடு வேலையாள், அதற்கான 8ஆம் வகுப்பு தேர்ச்சி, அதற்கான பயிற்சி காலம் 1 ஆண்டு ஆகிய பயிற்சிகள் முறையே வழங்கப்படுகின்றது.
இந்த பயிற்சிகளை முடித்த சுமார் 70 மாணவ,மாணவிகளுக்கு இன்று பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், கைக்குழந்தையுடன் வந்து தொழிற்பயிற்சியை வெற்றிகரமாக முடித்துப் பட்டம் பெற்ற 2 பெண் பயிற்சியாளர்களை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார். குழந்தைகளுடன் குடும்ப சூழ்நிலையை கடந்து சிறப்பாக பயிற்சியினை முடித்தமைக்காக வாழ்த்தி மேலும் சாதனைகள் புரிய வேண்டுமென ஊக்கமளித்தார்.
இதில் உதவி இயக்குநர் (திறன் பயிற்சி) து.சித்ரா, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ். சிவசுப்பிரமணியன், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சேதுபதி, புருஷோத்தமன், சிவராமகிருஷ்ணன், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், திரளான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
0Shares