கோவையில் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள்

Loading

தவறான செல்போன் உபயோகம் காரணமாக, சிந்திக்கும் திறனை இழந்து வரும் குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, புதிய முயற்சியை ஏற்படுத்தும் சூஸ் அன்ட் ரீட் நூலகம்! குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது..
கோவை திருச்சி சாலை, பந்தயசாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சூஸ் அன்ட் ரீட் என்ற நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களாக சுமார் 4000த்திற்க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்ற நிலையில், தற்போதய இளைய சமுதாயம், செல்போன் களுக்குள் புகுந்து தங்களது அறிவுத்திறனை இழந்து வருவதுடன், பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இத்தகைய குழந்தைகளை மீட்கவும், சிந்திக்கும் திறனை இழக்கும் குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையிலும், இந்த நூலகம் தற்போது புதிய யுக்திகளை கையிலெடுத்து வருகின்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்களை ஸ்மார்ட்டாக கையாள நமது குழந்தைகளுக்கு கற்று தருவோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செல்போன்கள் மூலமாக புத்தகங்கள் படிப்பதை ஊக்குவித்து, இனைய தள செயல்பாடுகளில் இருந்து குழந்தைகளை மீட்பது போன்ற பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர் 14ம் தேதி
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, இனையதளத்தின் வாயிலாக, குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்த பட்டது. அதில் ஓவியம் வரைதல், கதை சொல்லுதல் திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்த பட்டது. இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்டோர் இனையதள வாயிலாக கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். இதில் சிறந்த திறமைகளை வெளிபடுத்திய குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்று விருதுகள் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில், சூஸ் அன்ட் ரீட் நூலகத்தின் உரிமையாளர் நியாஸ் அஹமது, ஜூசோ ஆப்டர் ஸ்கூல் அமைப்பின் இயக்குனர் இம்ரான், ஜூசோ ஆப்டர் ஸ்கூல் அமைப்பின் நிறுவனர் ஷாஜு நிஷா, ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக சைதன்யா டெக்னோ பள்ளியின் முதல்வர் ஷீபா கிளாடிஸ், தமிழ்நாடு மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸின் பொதுமேளாலர் பிரோஸ் பாபு, கோவை மீடியா நிறுவன தலைவர் மருதாச்சலம், ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்கள், மற்றும் விருதுகளை குழந்தைகளுக்கு வழங்கினர். தொடந்து இது குறித்து சூஸ் அன்ட் ரீட் நூலகத்தின் உரிமையாளர் நியாஸ் அஹமது செய்தியாளர்களிடம் கூறியதாவது.. குழந்தைகளிடையே வாசிக்கும் திறனை அதிகரிக்க
நமது நூலகத்தில், ஜூசோ ஆப்டர் ஸ்கூல் என்ற அமைப்புடன் இணைந்து, 4 வயது குழந்தைகள் முதல் 15 வயதுகள் வரை உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்த படுவதாகவும், இந்த பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளுக்கு செல்போன்களை எதற்காக பயண்படுத்த வேண்டும்? எதற்காக எல்லாம் பயன்படுத்த கூடாது என்பது பற்றி, தெளிவாக கற்று தருவதாகவும், இந்த வகுப்புகள் குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தெரிவித்தார்.
0Shares