இசையை ஒருபாடதிட்டமாக கற்றுதர முன்வரவேண்டும்
![]()
இந்தியாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், மாணவ மாணவியர்களுக்கு, இசையை ஒரு பாட திட்டமாக கற்று தர முன்வர வேண்டும், பத்ம ஸ்ரீ, மற்றும் கலைமாமணி விருது பெற்ற திருவாருர் பக்தவத்சலம் கோவையில் கோரிக்கை!!!
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளி வளாகத்தில், கலா சங்கம் க்ளோபல் சார்பாக, யுவ கலா உட்சவ் எனும் இசை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக 60 ஆண்டுகள் கலை பயணத்தின் சாதனையாளரான, பத்ம ஸ்ரீ கலைமாமணி, உள்ளிட்ட விருதுகளை பெற்ற
திருவாருர் பக்தவத்சலம் கலந்து கொண்டு, தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியானது இளம், கலைஞர்களின் வளர்ச்சிக்காக நட்த்த பட்டது. இந்த இசை நிகழ்ச்சியை நடத்திய கலா சங்கம் க்ளோபல் அமைப்பு இந்தியாவில் மட்டுமின்றி யுகே நாட்டிலும் உள்ளது. இந்த அமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பரதநாட்டியம், மோகினியாட்டம், உள்ளிட்ட பாட்டு கச்சேரிகள் நடைபெற்றது. இதில் 6 வயதில் இருந்து 17 வயது வரையிலான மாணவியர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியானது
லயம் மதுரா எனும் தலைப்பில் நடைபெற்றது.
நேற்றைய நடன நிகழ்ச்சியில் மோகினி ஆட்ட கலைஞர் கலைமாமணி கோபிகா வர்மா கலந்து கொண்டு, சிறப்பித்தார்.
இதனை தொடர்த்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்ம ஸ்ரீ, மற்றும் கலைமாமணி விருது பெற்ற திருவாரூர் பக்தவத்சலத்திற்க்கு மிருதங்க கலா சாம்ராட் என்ற விருது வழங்கபட்டது. இதில் சுமார் இரண்டு நாட்களில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கலா சங்கமம் குளோபல் நடத்திய இந்த நிகழ்ச்சியினை இந்த அமைப்பின் நிறுவனர் கீதா உபாத்யாயா, மற்றும் புதியதாக இந்த நிறுவனத்திற்கு இயக்குநராக பொறுப்பேற்று உள்ள சாய்ராம் விஸ்வநாதன் இணைந்து வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பத்ம ஸ்ரீ, கலைமாமணி விருது பெற்ற பக்தவத்சலம், மற்றும் மிருதங்க கலைஞர் மாயவரம் விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது…
இசைக்கென்று ஒரு உலகம் உள்ளது. அந்த உலகில், பல இசை கலைஞர்கள், நடன கலைஞர்கள், மிருதங்க வித்வான்கள், தவில் வித்வான்கள், பரதநாட்டியங்கள் என பலதரப்பட்ட வடிவங்களில் இசை உள்ளது. ஆனால் இன்றைய இளைய சமுதாயம் இத்தகைய கலைகளை முறையாக கற்காமல், சிறு வயதிலேயே செல்போன்களில் மூல்கி தங்களது வாழ்க்கையை தொலைந்து விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அதற்க்கு முதலில் பெற்றோர்கள், செல்போன் பயண்படுத்துவதை குறைக்க வேண்டும். குழந்தைகள் முன்பாக செல்போன்களில் ரீல்ஸ் பார்ப்பது, கேம் விளையாடுவது, உள்ளிட்டவைகளை பார்க்கும் பொழுது குழந்தைகளும் அவற்றை தேடுகின்றனர் இவைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் குழந்தைகளின், தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு அத்திறமைகளை வெளி கொண்டு வர உறுதியாக பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்றனர். மேலும் இந்தியாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு இசைகளை கற்று தர அரசு முன் வர வேண்டும். இதனை ஒரு பாட திட்டமாக அமுல் படுத்தி அதற்க்கு உரிய ஆசிரியர்களை நியமிக்க, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகளையும் விடுத்தார்.

