பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி
![]()
பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி
திருவண்ணாமலை, நவ.17- திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையம், அறிவொளி பூங்கா அருகில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியை ஆர்.அபிஷேக் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் சீர்மிகு வழிகாட்டுதலின்படி ஒவ்வொருஆண்டும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டிபோட்டி, நெடுத்தூர ஓட்ட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரால் திருவண்ணாமலை மாநகராட்சியில் உட்பட்ட பழைய பேருந்து நிலையம், அறிவொளி பூங்கா அருகில் பெண்களுக்கான நெடுந்தூர ஓட்டபோட்டியானது துவக்கி வைக்கப்பட்டது.
இப்போட்டிகளில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் 5 கி.மீ பிரிவில் திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையம் (அறிவொளி பூங்கா) அருகே துவங்கி, மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 5 கி.மீ பிரிவில் திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையம் (அறிவொளி பூங்கா) அருகே துவங்கி, மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் 8 கி.மீ பிரிவில் இடிஞ்ச மண்டபம் (காஞ்சி ரோடு பிரிவு) அருகே துவங்கி, மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10 கி.மீ பிரிவில் சீனிவாசா பள்ளி, கோசாலையில் துவங்கி மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும் நெடுத்தூர ஓட்ட போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கும், 2வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.3ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கும், 3வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.2ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கும், 4வது இடம் முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் 28 நபர்களுக்கும் பரிசுதொகையானதுஅவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவசுப்பிரமணியன், உடற்கல்வி ஆய்வாளர் ஜெ.செந்தில்குமார் மாவட்ட விளையாட்டு அலுலவர் சண்முகாப்பிரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

