கோவையில் புதிய தி குட் பேக்கரி துவக்க விழா
![]()
கோவையில், பேக்கரி கலாச்சாரத்திற்கு புதிய சுவை சேர்க்கும் ‘தி குட் பேக்கரி கோவை சாய்பாபாகாலனி பகுதியில் துவங்கபட்டது. கோவை மாநகரில் 4வது கிளையை துவங்கியுள்ளதாக உரிமையாளர்கள் பேட்டி…
கோவையில், பள்ளி நேர சிற்றுண்டிகள் முதல் மாலை நேர ருசிகர உணவுகள் வரை, தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான உணவுகளை வழங்கி வரும், தி குட் பேக்கர்’எனும் நிறுவனம், கோவை மாநகரின் பேக்கரி கலாச்சாரத்திற்கு புதிய அணுகுமுறையை வழங்கும் நோக்கில், நீண்டகால நண்பர்களான அமர்நாத் மற்றும் பிரசன்னா இணைந்து ‘தி குட் பேக்கர்’ நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
ஐஐடி மெட்ராஸில் ஒன்றாகப் படித்த அமர்நாத் மற்றும் பிரசன்னா, பல்வேறு ஆய்வுகள் நடத்தி, நல்ல ஊதியம் கிடைத்த பணிகளைத் துறந்து, தங்களை, தொழில்முனைவோர்களாக மாற்றும் நோக்கில், பேக்கரி தொழிலில் களமிறங்கி உள்ளனர்.
பாரம்பரிய பேக்கரி உணவுகளின் பழக்கமான சுவையுடன், தரமான மூலப்பொருட்கள், புதுமையான செய்முறைகள் மற்றும் வித்தியாசமான சுவைகளை இணைத்து, அவற்றை நியாயமான விலையில் வழங்குவதே ‘தி குட் பேக்கர்’ நிறுவனத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
இந்த அணுகுமுறையை வெளிப்படுத்தும் வகையில், ‘தி குட் பேக்கர்’ நிறுவனத்தின் சிறப்பு உணவுகளில் ஓபன் பஃப்ஸ் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பாக, சிக்கன் சுக்கா ஓபன் பஃப், தென்னிந்தியாவின் தனித்துவமான சுவைகளை மொறுமொறுப்பான,அடுக்குகளைக் கொண்ட வெண்ணெய் கலந்த பேஸ்ட்ரியுடன் இங்கு கிடைக்கின்றது.
நிறுவனத்தின் தயாரிப்புகளில் பாமாயில் பயன்படுத்தப்படுவதில்லை. பஃப் பேஸ்ட்ரியில் வெண்ணெய் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவதுடன், பெரும்பாலான தயாரிப்புகள் நிறுவனத்தின் சொந்த சமையலறைகளிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் மூலப்பொருட்களின் தரம், தயாரிப்புகளின் புத்துணர்ச்சி மற்றும் சீரான சுவை ஆகியவற்றை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிகிறது.
பிரெட், பன், குக்கீஸ், பேஸ்ட்ரிகள் மற்றும் பிரவுனீஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் மெனுவில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் மாவு இல்லாமல் தயாரிக்கப்படும் பேஸ்ட்ரிகள் மற்றும் பாரம்பரிய இறைச்சி வடைகளின் சுவையை அடிப்படையாகக் கொண்ட சிக்கன் மற்றும் மட்டன் கறி வடை பர்கர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் ‘தி குட் பேக்கர்’ நிறுவனம், நான்கு கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றதாகவும், சாய்பாபா காலனியில் என்எஸ்ஆர் ரோடு, வடவள்ளியில் மருதமலை ரோடு, சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரி டெக் பார்க் பகுதி மற்றும் சௌரிபாளையத்தில் சௌரிபாளையம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் கிளைகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

