கோவை மாணவர்களுக்கு உற்ச்சாக வரவேற்பு

Loading

கோவை
நேபாளத்தில் நாண்கு நாட்கள் நடைபெற்ற, சர்வதேச சிலம்ப மற்றும் கராத்தே போட்டிகளில் கோவையை சேர்ந்த கராத்தே விஜூ மார்சுயல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவியர்கள், பங்கேற்ற 17 மாணவ மாணவியர்களும் முதல் பரிசை தட்டி சென்று தாயகம் திரும்பினர். கோவையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்..
கோவை குனியமுத்தூர் பகுதியில், கடந்த 25 ஆண்டுகளாக கராத்தே விஜூ மார்சுயல் ஆர்ட்ஸ் அகாடமி எனும் பயிற்சி மையத்தை, டாக்டர் எம் விஜூ நடத்தி வருகின்றார்.
இங்கு மாணவ மாணவியர்களுக்கு கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, வெயிட் லாஸ், போன்ற பயிற்சிகள் அளிக்க பட்டு வருகின்றது. இங்கு சுமார், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை உள்ளிட்ட பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களை, போட்டிகளுக்கு தயார் செய்து, மாநில, மாவட்ட, மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில், பங்கேற்க்க வைத்து வெற்றி பெற்றுள அகாடமியாக இந்த பயிற்சி மையம் செயல்பட்டு வந்த நிலையில்,, கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை, நேபாளத்தில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கினைப்பில், விளையாட்டு மற்றும் செயல்பாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக, போக்ரா மைதானத்தில் சர்வதேச அளவில், கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், கலந்து கொள்ள, கராத்தே விஜூ மார்சுயல் ஆர்ட்ஸ் அகாடமி யில் பயிலும் மாணவர்கள் 17 பேர், மாஸ்டர் டாக்டர் விஜூ, மாஸ்டர் மஹாலட்சுமி, மாஸ்டர் காளியப்பன், பயிற்சியாளர்கள் விஷ்ணு, மற்றும் விஷால், ஆகியோருடன் சென்று, அங்கு நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, 17 பேரும் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
அவ்வாறு வெற்றி பெற்ற, 17 மாணவர்களும் பேருந்து மார்க்கமாக நேற்று கோவை திரும்பினர் இவர்களுக்கு காந்திபுரம் பகுதியில், பெற்றோர்கள், பொதுமக்கள சார்பாக உற்ச்சாக வரவேற்பு அளிக்க பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பயிற்சியாளர் விஷ்ணு கூறியதாவது..
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச கராத்தே, மற்றும் சிலம்ப போட்டிகளில் மாணவ மாணவியர்களை அழைத்து சென்று கலந்து கொள்ள வைத்ததாகவும், இதில் அவர்களின் திறமைகளை வெளிபடுத்தி அனைவருமே முதல் பரிசை வென்றது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது, இங்கு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை, அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ள, ஏசியன் கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகளில், கலந்து கொண்டு இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்க உள்ளார்கள். இதற்கான பயிற்சிகளை நாளை முதல் அவர்களுக்கு அளிக்க பட உள்ளது என தெரிவித்தார்.
0Shares