கோவையில் தங்கம் தருவதாக கூறி மோசடி

Loading

கோவையில் தங்கம் குறைந்த விலையில் தருவதாக கூறி, 5 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட பெண் மனு
கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சாந்தி. இவர் வேலாண்டிபாளையம் பகுதியில் டோர்ஸ் அண்டு ப்ளேஸ் இந்தியா என்ற பெயரில் பிளைவுட் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் ரீதியாக இவருக்கு அறிமுகமான அனுதீப், என்ற நபர் மூலமாக அறிமுகமான கௌரிசங்கர் என்பவர், செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான வெஸ்டர்ன் கோல்ட் லோன் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அவரது அலுவலக பணியாளர்களுக்கு குறைவான விலையில் தங்கம் கொடுப்பதாக கூறி மார்க்கெட்டிங் செய்து, அடமானத்தில் உள்ள நகையை செய்கூலி, சேதாரம் இல்லாமல் தனக்கு தருவதாக ஆசை வார்த்தை கூறி, என்னிடம் இருந்து சுமார் ஐந்து லட்ச ரூபாய் பணம் என்னிடம் கேட்டார். இதற்க்கு கௌரிசங்கர் மற்றும் அனுதீப் ஆகியோர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதன் பேரில் நான் கடந்த 02.09.2026 அன்று செந்தில்குமார் பெயரில் உள்ள அவரது வங்கி கணக்கான, வெஸ்டன் கோல்ட் லோன் என்ற நிறுவனத்திற்கு, 5 லட்சம் ரூபாய் பணம் அனுப்பி உள்ளேன். மேலும் கௌரிசங்கர் மற்றும் அனுதீப் ஆகியோர் கூறியது போல், எனக்கு நகையை கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டனர் எனவும், பணம் அனுப்பியவுடன் நகையை ஒப்படைப்பதாக உறுதியளித்தனர் ஆனால், என்னை முழுமையாக ஏமாற்றி விட்டார்கள் எனவும், இதனால் நானும் பலமுறை செந்தில்குமாரின் அலுவலகம் சென்று பார்த்த பொழுது, என்னை அவர்கள் உள்ளே செல்ல கூட அனுமதிக்காமல் விரட்டியடிப்பதாகவும், எனது அலைபேசியை எடுக்காமல் என்னை அலைக்கழத்து வருகின்றனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இது குறித்து பின்னர் விசாரித்த பொழுது தான் தெரிந்தது. அனுதீப், செந்தில்குமார், கௌரிசங்கர், ஆகிய மூவரும் கூட்டு சதி செய்து என்னை ஏமாற்றி உள்ளார்கள், எனவும் எனவே இவர்கள் மூவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதுடன் மூவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
0Shares