கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தான்

Loading

நவம்பர் 15, உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கோவை, ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் பங்கேற்றனர்..
கோவை காந்திபுரம் அடுத்த, ராம்நகரில் உள்ள, கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பாக, நடைபெற்ற
இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வை, கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை, ரோட்டரி மாவட்டம் 3206, இந்திய மருத்துவச் சங்க கோவை கிளை, ஆர்.எஸ்.எஸ்.டில் தமிழ்நாடு கிளை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் டயாபடீஸ் அவர்னஸ் கமிட்டி ஆகியவை இணைந்து நடத்தியது, இந்த வருடத்திற்கான கருத்தாக்கமாக நீரிழிவு நோய் தொடர்பாக முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தல் என்ற கருப்பொருளின் கீழ் இவ்வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது.
இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியானது, ராம்நகரில் துவங்கி விவேகானந்தா சாலை, ஹோட்டல் சிட்டி டவர், டாக்டர் நஞ்சப்பா ரோடு வழியாக நேரு ஸ்டேடியத்தை வந்தடைந்தது.
இந்த வாக்கத்தான் நிகழ்வை ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3206 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஆர்.எஸ் மாருதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கௌரவ விருந்தினர்களாக 2028 – 2029 ஆண்டுக்கான மாவட்ட கவர்னர் ரோட்டேரியன் சஞ்சீவிகுமார், ரோட்டரி மாவட்டம் 3206 மாவட்ட இயக்குனரும் முன்னாள் ஏர் வைஸ் மார்சலமுமான ரோட்டேரியன் டாக்டர் என் விஜயகுமார், இந்திய மருத்துவ சங்க கோவை கிளயின் தலைவர் டாக்டர் பி கோசல் ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வாக்கத்தான் நிகழ்வில் பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டொர் பங்கேற்று, டயாபடீஸ் குறித்து பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares