சாலையோர தள்ளுவண்டி வலுக்கட்டாயமாக அகற்றம்

Loading

சாலையோர தள்ளுவண்டி வலுக்கட்டாயமாக அகற்றம்

 

தீபத் திருவிழா முன்னிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது சாலையோர தள்ளுவண்டி வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வது மற்றும் பழவகை, தினசரி பயன்படுத்தும் பொருட்களை சேதப்படுத்த கூடாது மாநில பிரச்சார செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்கிடம் கோரிக்கை
தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொமுச மாநில பிரச்சார செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமையில் நடைபாதை வியாபாரிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்கிடம் கோரிக்கை வைத்தார்.
தீபத்திருவிழாவில் சிறுகடை மற்றும் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படையாத வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் திருவண்ணாமலை மாநகரம் மற்றும் மலை சுற்றும் பாதையில் சிறு கடை மற்றும் நடை பாதை வியாபாரிகள் தினசரி வருமானம் வாழ்வாதாரத்தை வைத்து தான் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

5000க்கும் மேற்பட்ட சிறுகடை மற்றும் நடைபாதை தொழிலாளர்களை நசுக்கி தீபத்திருவிழா கொண்டாடாதீர்கள். மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் பதிவு செய்த நடைபாதை வியாபாரிகள் 2600 பதிவு செய்யாத ஏழ்மையான நிலையில் வாழ்வாதாரம் இல்லாமல் பிழைப்பை நடத்துபவர்கள் சுமார் 2000 நபர்கள் இருக்கும். ஆக மொத்தம் 5000க்கும் மேற்பட்டோர் இந்த தீபத்திருவிழாவில் 10 நாட்கள் வியாபாரத்தை நம்பி பல குடும்பங்கள் காத்திருக்கின்றது.
மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும்போது வறுமையில் உள்ள சிறுகடை மற்றும் நடைபாதை வியாபாரிகளை மனதில் வைத்து மனித நேயத்துடன் நடத்த வேண்டும். இதில் சில அதிகாரிகள் வரம்பை மீறி ஏழை எளிய மக்களின் தள்ளுவண்டி மற்றும் தினசரி பயன்படுத்தும் பழவகைகள் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்று விடுகிறார்கள். இதனை இந்த ஆண்டு தவிர்க்க வேண்டும். மேலும் தீபத்திருவிழா முக்கிய நாளான தேர் திருவிழாவிற்கு முன்பு அவரவர் பகுதி சாலை ஓரங்களில் இடம் ஒதுக்கி வியாபாரம் செய்திட வழி வகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொமுச மாநில பிரச்சார செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்கிடம் வியாபாரிகள் சார்பில் கோரிக்கை வைத்தார்.
உடன் மாநகர சாலையோர வியாபாரிகள் குழு உறுப்பினர்கள் ஆர்.புஷ்பா, ஆர்.கவிதா கே.நடேசன், எம்.ஞானவேல், ஜெ.கலாம்பாஷா, எம்.ராஜகுமாரி, வே.கலா சி.ரத்தினம்மாள் வி.சத்யா ஏ.அபிநயா உள்பட நடைபாதை வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

0Shares