பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம்
![]()
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம் : மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தகவல் :
திருவள்ளூர் நவ 09 : திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம் 16.11.2026 திங்கட்கிழமை அன்று காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் கல்வி தகுதியுடையவர்கள் தேர்வு செய்ய உள்ளார்கள். இம்முகாமில் தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் என்.ஏ.சி சான்றிதழ் பெற்று பயனடையலாம்.
இதற்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள் (NCVT / SCVT) 01 ஆண்டு (Designated Trade), 8வது, 10வது மற்றும் +2 படித்தவர்கள் (Fresher Apprentice) பயிற்சிகாலம் 15 மாதங்கள் முதல் 02 ஆண்டுகள் வரை (Designated Trade), Diploma/Any Degree (B.A., B.Sc., B.Com., BBA., BCA., B.E., B.Pharm., etc 01 ஆண்டு மற்றும் 02 ஆண்டுகள் (Optional Trade).
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் அவர்களை நேரிலோ அல்லது dstotvlr2025@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9499055663, 9445090653 மற்றும் 9677052117 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தொழிற் பழகுநர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.

