கோவையில் மருத்துவருக்கு வழங்கபட்ட விருது
![]()
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனையில் நிறுவனர் தின விழா நிகழ்ச்சி. ஆண்டு தோறும் சிறந்த மருத்துவர்களை தேர்வு செய்து சாதனை அங்கீகாரம் வழங்கபடும் நிலையும் இந்த ஆண்டு டாக்டர் நாகேஷ்வர ரெட்டிக்கு வழங்கபட்டது.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனையில் நிறுவனர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் நடத்த படும் இந்த விழாவின் வாயிலாக இந்தியாவில் தலை சிறந்த மருத்துவர்களாக பல்வேறு சாதனை செய்யும் மருத்துவர்களை தேர்வு செய்து அவர்களை சாதனை படுத்தும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடத்த பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏ.ஐ.ஜி மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் நாகேஸ்வரர் ரெட்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது நமது நாட்டில் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் தனது சிறப்புரையை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நிறுவனர் தின விழா கொண்டாட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது அப்பொழுது பேசிய கங்கா மருத்துவமனையின் இயக்குநர்கள் டாக்டர் ராஜசபாபதி, மற்றும் ராஜ சேகரன் ஆகியோர் கூறியதாவது… கடந்த, 1978 ஆம் ஆண்டில், ஒவ்வொரு நோயாளிக்கும், சிகிச்சையை மலிவான விலையில் வழங்கும் நோக்கத்துடன் கங்கா மருத்துவமனை நிறுவப்பட்டது. ஆனால் தற்பொழுது கங்கா மருத்துவமனை தனது தொழில் முறை மற்றும் கல்விசார் சிறப்புகளுக்காக மருத்துவ நிறுவனங்களுக்கு மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கிறதாக தெரிவித்தனர். ஆண்டுதோறும் இந்த நாளில் ஒவ்வொரு தலைசிறந்த மருத்துவர்களை அழைத்து அவர்களை பாராட்டும் விதமாக கொண்டாட பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். இந்த ஆண்டுக்கான பாராட்டை பெறும் மருத்துவர், பத்ம விமோஷன் பட்டம் பெற்றுள்ள டாக்டர் நாகேஸ்வர ரெட்டி எனவும், தற்போதைய காலகட்டத்தில் குடல் மற்றும் இரைப்பைவியல் துறையில் மிகவும் புகழ்பெற்ற நபர்களில் டாக்டர் நாகேஸ்வர ரெட்டி உள்ளார். அவரது சாதனைகள் இந்திய மருத்துவத்திற்கு சர்வதேச பெருமையை கொண்டு வந்துள்ளதாககவும் அவரை பெருமை படுத்துவதில் கங்கா மருத்துவமனையும் பெருமை படுவதாக கூறினர். தொடர்ந்து அவரது சாதனையை பாராட்டி விருதுகள் வழங்கி கெளரவ படுத்த பட்டது.

