கோவை தூய்மைபணியாளர்களுக்கு தீபாவளிபரிசுகள்

Loading

கோவை மாநகராட்சி 55வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லூர் அடுத்த எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில், தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா, 
தீபாவளி திருநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கிய மதிமுக கவுன்சிலர் அன்பு என்கிற தர்மராஜ். 
கோவை மாநகராட்சி,
55-வது வார்டுக்கு உட்பட்ட சிங்காநல்லூர் அடுத்த எஸ்.ஐ.ஹெச்.எஸ் பகுதி, மாமன்ற உறுப்பினர் அன்பு என்கிற தர்மராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மற்றும் மூங்கில் பூங்கா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற அனைத்துப் பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள், கார வகைகள் மற்றும் சிறப்பு போனஸ் தொகை வழங்கி மாமன்ற உறுப்பினர் அன்பு என்கிற தர்மராஜ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக அயராது உழைக்கும் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, பண்டிகை காலத்தில் அவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
தங்களுக்கு தீபாவளி பரிசுகள் மற்றும் போனஸ் வழங்கி கௌரவித்த மாமன்ற உறுப்பினருக்கு பணியாளர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். மேலும் தூய்மை பணியாளர்கள் சூயஸ் குடிநீர் இணைப்பு பணியாளர்கள் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் பூங்கா பராமரிப்பாளர்கள் தெருவிளக்கு பராமரிப்பாளர்கள் மற்றும் வார்டின் வளர்ச்சிக்காக பணியாற்றும் நண்பர்கள் என, சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்களை, அழைத்து 55வது வார்டில் உள்ள மூங்கில் பூங்கா பகுதியில், தீபாவளி இனிப்புகள் கார வகைகள் மற்றும் சிறப்பு போனஸ் தொகையும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் கு விஜயகுமார், பொறியாளர் அணி ராஜன், 54 வது வட்ட செயலாளர் பாலன், 55 வது வட்ட துணைச் செயலாளர் ஆனந்தன் மோகன், குமரேஸ், பரமசிவம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0Shares