கோவை பத்திர பதிவு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Loading

கோவையில் தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் சார்பாக, கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பத்திரப்பதிவு முறையில் பழைய முறையை தொடர வேண்டும் என்று கூறி கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை, பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாப, தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் சார்பாக கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ. உமாபதி, மாவட்ட பொருளாளர் பாபு என்கிற விஜயராகவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது..
தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகங்களில், சுமார் 10லட்சம் பத்திர எழுத்தர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த 1865 ஆம் ஆண்டு முதல் பத்திரப்பதிவு துறையில் எழுத்தர்கள் மூலம் பத்திரப்பதிவு எழுத்துபணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அரசு இதை தனியார் துறைக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஹப்
ஈ டெண்டர் மூலம் தனியாருக்கு இதற்கு அழைப்பு அனுப்பியுள்ளது. ஆன்லைன் மூலமாக பத்திர பதிவுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முறையில் ஆள் மாறாட்டம், போலி பத்திர பதிவுகள் நடக்க அதிக அளவில், வாய்ப்பு உள்ளது. மேலும் இதில் வாங்குபவர் மற்றும் கொடுப்பவர் பெயர்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. இதனால் முழு விவரமும் அதில் குறிப்பிடப்படுவதில்லை. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதோடு இதை தனியாருக்கு மாற்றுவதால் 10 லட்சம் பத்திர எழுத்தர்கள் குடும்பங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் விஜய், மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர்கள் துடி, ரஞ்சித் பிரபு, சிவக்குமார், அந்தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0Shares