முதலமைச்சரின் விளையாட்டு அரங்க கட்டுமானபணி

Loading

செவ்வாய்பேட்டை, வேப்பம்பட்டு மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் இரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் மே 11 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், செவ்வாய்பேட்டையில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.8.1 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 15 கட்டுமானப் மேம்பால பணிகளையும், வேப்பம்பட்டில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 13  கட்டுமானப் மேம்பால பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேம்பால பணிகளை  விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.44.5 கோடி மதிப்பீட்டில் அத்திப்பட்டு நந்தியம்பாக்கம் இடையே கட்டடப்பட்டு வரும் மேம்பால பணிகளையும், மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி துறை சார்பில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுச்சார் மையம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தாமரைகுளம் சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா கட்டுமான பணிகளையும்,  தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
மேலும்,  காக்களுர் ஊராட்சி பகுதியிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இவ் ஆய்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) தணிகாச்சலம், உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரி, செயற்பொறியாளர் (ஊ.வ) தணிகாச்சலம், உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிசேகர் (வ.ஊ), குணசேகரன் (கி.ஊ), நெடுஞ்சாலைகள் துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் தேசிகன், திரு.கார்த்திகேயன், மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares