கோவை வடக்குசுயேச்சை வேட்பாளர் சரவணன்தேர்தல் பரப்புரை

Loading

கோவை
கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, ஸ்டூல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சத்ரபதி சிவாஜி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர் நல நற்பணி நல சங்க நிறுவனருமான  சரவணன் தனது தேர்தல் பரப்புரையை துவங்கினார்.
கோவை சத்ரபதி சிவாஜி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர் நல நற்பணி சங்க நிறுவனருமான  சரவணன், மக்கள் ஆசியுடன், கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகின்றார். இவருக்கு தேர்தல் ஆணையம் ஸ்டூல் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அவ்வாறு ஒதுக்க பட்டுள்ள சின்னத்திற்கு வாக்க சேகரிக்கும் பணிகளை இன்று துவங்கினார். இவர் கோவை பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். மேலும் இது குறித்து சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது. இன்று முதல் வாகனத்தில், தனது பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் துவங்கியுள்ளதாகவும், நேரடியாக மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருவதாகவு‌ம் கூறினார். வடக்கு சட்ட மன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகள் என்னென்ன என்பதை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும் கூறினார், மேலும் மாதம் இருமுறை தனது தொகுதி  மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றையும் உடனடியாக தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன். மக்கள் எந்த தேவைகளுக்காகவும் என்னை எப்பொழுதும் சந்திக்கலாம் என கூறினார். இந்த நிகழ்ச்சியில்,
ஜெய் ஹனுமன் வெற்றி சேனா அமைப்பின் நிறுவனர் கே.எஸ். கனகராஜ், தீரன் சின்னமலை கவுண்டர் இளைஞரணி நிறுவனர் தீரன் கவி, சத்ரபதி சிவாஜி அறக்கட்டளையின் பசியில்லா தமிழக அங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares