திருவள்ளூரில்விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
![]()
திருவள்ளூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :
திருவள்ளூர் பிப் 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 7500 ஏக்கரில் ரூ.93.73 இலட்சம் மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிடப்பட்டு விவசாயிகளுக்கு தற்போது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒரு கிலோ முழு விலையாக ரூ.129.4 இதில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.62.50 வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் நிழல்வலை குடில் 1000 ச.மீ பரப்பளவில் 3.55 லட்சம் மானியத்தில் அமைப்பதற்கு ஒரு பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முடிவடைந்து 3.55 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொய்யா, எலுமிச்சை, பப்பாளி போன்ற 3 வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு ரூ.100/- மதிப்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கிட 32900 எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது. 32900 எண்கள் பழச்செடி தொகுப்பு வழங்கப்பட்டு 32900 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
புதிய அறிவிப்பாக மதிப்புக் கூட்டுதல் குறித்தான திட்டம் ரூ.2 கோடி இலக்குகள் பெறப்பட்டுள்ளது. சுமார் 10 கோடி வரையிலான முதலீடு மதிப்புக் கூட்டுதல் செய்து ரூ.1.5 கோடி வரை மானியம் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. மூன்று பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் மூன்று பயனாளிகளுக்கு சுமார் 20.44 கோடிக்கான கடனுக்கு ஒப்புதல் பெறப்பட்டு மாவட்ட அளவிலான தொழில்நுட்பக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு மாநில அளவிளான குழுவிற்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு 2 நபர்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தமிழக அரசு உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 50 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ உளுந்து விலை ரூ.78 என கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரு ஹெக்டர் சாகுபடி பரப்பிற்கு 531 கிலோ உளுந்து மட்டுமே கொள்முதல் செய்திட அரசு வழிகாட்டி நெறிமுறை வழங்கப்பட்டும். இத்திட்டத்தினை 25.03.2026 வரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்திடவும் கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து 140-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, 17 விவசாயிகளுக்கு ரூ.47,99,575 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.மேலும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைபதிவாளரும் செயலாட்சியருமான மீனா அருள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி,வேளாண்மை துணை இயக்குநர் ஸ்ரீசங்கரி, கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் ப.ஜெயந்தி ஆகியோர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

