ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா
![]()
கோவை,
துடியலூர் அருகே வட்டமலைபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இக்கல்வியாண்டில் கல்லூரியின் சிறந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழா நிகழ்வில் கல்லூரி முதல்வர். டாக்டர் டி கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசியதுடன் கல்லூரி வளர்ச்சி, முதலீடுகள் மாணவ, மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு சாதனைகள் ஆகியன விரிவாக ஆண்டறிக்கையாக சமர்ப்பித்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு டாக்டர் R சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி பேசினார்.
சிறப்பு விருத்தினராக கோவை சைட் பிளானிங் ஆல்ஷ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் தலைவர் டி கவுசிக் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

