சென்னையின்குடிநீர்க்கு விநாடிக்கு 500 கன அடி திறப்பு
![]()
சென்னையின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது :
திருவள்ளூர் பிப் 28 : சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி தண்ணீரும் என 12 டிஎம்சி தர ஆந்திர தமிழக அரசுகளிடையே போடப்பட்ட தெலுங்கு கங்கா ஒப்பந்தத்தின்படி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 2-ஆம் கட்ட பருவத்திற்கான தண்ணீரை கடந்த 24-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து ஆந்திர பொதுப்பணித் துறையினர் வினாடிக்கு 500 கன அடி திறந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று தமிழகம் வந்தடைந்தது.
இந்த நிலையில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டிலிருந்து 25 கிலோ மீட்டர் பயணித்து சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. தமிழக எல்லை பகுதியில் வினாடிக்கு 250 கன அடியாக வரும் தண்ணீர் பூண்டி ஏரிக்கு 150 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னை மக்களின் குடீநீர் தேவைக்காக பூண்டி இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடியும், புழல் ஏரிக்கு 250 கன அடியும் என மொத்தமாக 500 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.5 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் 3159 இருப்பும், நீர்வரத்து 100 கன அடியாகவும் உள்ளது.

