14 ராணுவ வீரர்களுக்கு சமூக அமைப்பு சார்பில் அஞ்சலி:
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முப்படை தலைமை தளபதி மற்றும் 14 ராணுவ வீரர்களுக்கு சமூக அமைப்பு சார்பில் அஞ்சலி:குன்னூர் கடந்த ஆண்டு எட்டாம் தேதி நாட்டின் முன்னாள் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி உட்பட 14 உயர் ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் நஞ்சப்பச்சத்திரம் கிராமத்தில் மரத்தில் மோதி உயிரிழந்தனர் இந்த நிகழ்வுஓராண்டு நிறைவடைந்து. இதன் நினைவு தினம் குன்னூர் பேருந்து நிலையப் பகுதியில் கன்சர்வேஷன் எர்த் ஃபவுண்டேஷன் அமைப்பின் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்கள்,குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி அவர்கள்,மற்றும் சமூக அமைப்பை சேர்ந்தவர்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டுனர்களும்,. பொதுமக்களும் ஏராளமானர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின்ராவத் உட்பட 14 உயர் ராணுவ அதிகாரிகளின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.