கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம்

Loading

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி, ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் , சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா அருகில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2025-26ஆம் நிதியாண்டில் 5.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் 28.06.2025 அன்று தொடங்கப்பட்டு தற்பொழுது பணிகள் முடிவுற்ற நிலையில் கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதற்கு பொதுமக்கள் நிறைந்த மனதுடன் தமிழக அரசுக்கு நன்றித் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம் 50க்கும் மேற்பட்ட புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு, பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் 70க்கும் மேற்பட்ட கடைகள், நேரக்காப்பாளர் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, மின் விளக்கு வசதிகள், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பேருந்து நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பேருந்து நிலையத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் மிக நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் மூலம் கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். போதிய இடவசதியுடன் பல்வேறு நவீன வசதிகளுடன் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு நன்மைப் பயக்கும் வகையில் சீரான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளது.எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இப்புதிய பேருந்து நிலையத்தினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் இரா.சுப்ராயலு, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் ஆ.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி.இரா.புவனேஸ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.அலமேலு ஆறுமுகம், நகர்மன்ற துணைத் தலைவர் திருமதி.அ.ஷமீம்பானு அப்துல்ரசாத், அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குநர் க.குணசேகரன், கள்ளக்குறிச்சி நகர்மன்ற உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர், அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0Shares