கடம்பத்துார் அருகே 6 வயது குழந்தை கடத்தல்
![]()
கடம்பத்துார் அருகே 6 வயது குழந்தையை கடத்தி சென்ற இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை :
திருவள்ளூர் நவ 25 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த செஞ்சிபானம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்பெல்குமார், (45)இவரது மனைவி சுந்தரி, (40). சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்து எஸ்பெல் குமார் கோவிலுக்கு செல்வதற்காக இருமுடி கட்ட அருகில் உள்ள கோவிலுக்கு மனைவியுடன் சென்றார். அப்போது தனது 6 வயது மகனை வீட்டில் உள்ள தாய் விஜயலட்சுமியிடம் விட்டு விட்டு சென்றார்.
அப்போது அங்கு வடமாநில நபர் ஒருவர் விஜயலட்சுமியுடன் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பறித்து சென்றுள்ளார். இதையடுத்து விஜயலட்சுமியின் அலறலைக் கேட்ட எஸ்பெல்குமார் விரட்டி சென்று வடமாநில நபரை பிடித்தபோது அவர் குழந்தையை கீழே விட்டு தப்பியோடினார்.இதனையடுத்து எஸ்பெல்குமார் கொடுத்த புகாரின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடம்பத்துார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின் அப்பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் இமாச்சல்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமீத்குண்டல் (48) என்பதும் ஆறு வயது குழந்தையை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து கடம்பத்துார் போலீசார் அந்த வடமாநில நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

