ஹிந்துக்கள் எனும் புத்தகத்தின் தமிழாக்க வெளியீ
![]()
கோவை
ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் எனும் புத்தகத்தின் தமிழாக்க வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்றது.
கோவை பீளமேடு பகுதியில், சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி வளாகத்தில், “ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள்” என்ற நூலின் தமிழாக்க வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.
இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதிய ஆசிரியர் ஆனந்த ரங்கநாதன் மற்றும் இந்த நூலை தமிழாக்கம் செய்த எழுத்தாளர் பத்மன், சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் ராம சீனிவாசன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ன் நிறுவன தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகம் குறித்து புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஆனந்த் ரங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. ஹிந்து மதம் என்பது ஒரு மதமாக அல்ல, அது ஒரு தர்மம், அது முழுமையான வாழ்க்கை முறை என்றும், நமது கலாச்சாரமும் ஆன்மீகமும் இந்த தர்மத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளாக சுதந்திர இந்தியாவில் இந்த தர்மம் பல சவால்களை எதிர்கொண்டு அந்த சவால்களை அறிவுபூர்வமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த புத்தகத்தை தான் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வை ஸ்ரீமதி சண்முகம், பாலசுப்ரமணியம், வெங்கட்ராம் ராஜ்மோகன், முரளிதரன், சுரபி கார்த்திக், பிரபா ரவீந்திரன் மற்றும் தீக்ஷா விமல் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு புத்தகம் குறித்து தெரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

