கே.ஜி. கல்வி நிறுவனம் மாணவர்அறிமுக விழா
![]()

கோவை சரவணம்பட்டி பகுதியில், கே.ஜி. மருத்துவமனையின் கீழ் செயல்படும் கே.ஜி. செவிலியர் கல்லூரி மற்றும் கே. ஜி பள்ளி, கே.ஜி. பிசியோதெரபி கல்லூரி, மற்றும் கே.ஜி. இணை சுகாதார அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து 2025–2026ம் கல்வியாண்டிற்கான செவிலியர், பிசியோதெரபி மற்றும் இணை சுகாதார அறிவியல் துறைகளின் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் என 1,200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், கே. ஜி மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம், குத்துவிளக்கேற்றி விழாவை துவங்கி வைத்தார். தொடர்ந்து முதராம் ஆண்டு மாணவர்களை வரவேற்க்கும் வகையில், கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கே.ஜி. சுகாதார அறிவியல் கல்லூரியின் 30 ஆண்டுகால பயணத்தை வெளிப்படுத்தும் கானோளி காட்சிகள் திரையிடப்பட்டது. பின்னர், இந்திய ஒருமைப்பாட்டையும் அமைதியையும் குறிக்கும் விதமாக பகவத் கீதை, பைபிள் மற்றும் குர்ஆன் நூல்களிலிருந்து மேற்கோள்கள் வாசிக்கப்பட்டு மாணவர்களை வரவேற்று பேசினர். இந்த நிகழ்ச்சியில், கேஜி நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான அசோக் பக்தவச்சலம், முதலாம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக, கலந்து கொண்ட விஜிஎம் மருத்துவமனையின் எண்டாஸ்கோப்பி துறை இயக்குநரும், மருத்துவருமான கே. வம்சி மூர்த்தி, மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளரும் மைண்ட் ஃப்ரெஷ் ட்ரெயினிங்” நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான, கீர்தன்யா கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்லூரி வாழ்க்கை குறித்து விளக்கவுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கேஜி பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம். மனோஜ் அப்ரகாம், கே.ஜி. செவிலியர் கல்லூரியின் முதல்வர்
டாக்டர் சோனியா தாஸ், கே.ஜி. இணை சுகாதார அறிவியல் கல்லூரியின் முதல்வர்
பேராசிரியர் ஐ. ஹசீனா பேகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

