கல்வியமைப்பை திமுக அரசு சிதைத்துவிட்டது: நயினார் நாகேந்திரன் சாடல்!
தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும் திமுக அரசு சிதைத்துவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குற்றசாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,கௌரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை மட்டும் 8,000 ஆக உயர்த்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.திமுக அரசு அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது .
நமது தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும், ஆளும் அரசு சிதைத்து விட்டது என்பதைத்தான் இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதை விட்டுவிட்டு, கௌரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்துவதால் நமது பிள்ளைகளின் எதிர்காலம் பாழாக வேண்டுமா? UGC நிர்ணயித்தபடி ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் திமுக அரசு.
திமுக ஆட்சியில் குடிநீர், கழிவறை, தங்கும் விடுதி. உணவு போதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், பேருந்து வசதி என எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி செயலிழந்து கிடக்கும் அரசு கல்லூரிகளைப் முடக்கப் பார்க்கிறதா ஆளும் அரசு? இதனால் தான் கால அளவை பல மாதங்கள் நீட்டித்த பிறகும் கூட தமிழக மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவதில்லை.
தங்கள் இஷ்டத்திற்கு படிக்கும் பிள்ளைகளையும் படித்த பட்டதாரிகளையும் ஆட்டிப் படைக்கும் திமுக அரசின், அராஜக நிர்வாகத்திற்குக் கூடிய விரைவில் நாம் முடிவு கட்ட வேண்டும். இல்லையேல் எஞ்சியிருக்கும் பெருமைகளையும் இழந்து நமது தமிழகம் நிர்கதியாகிவிடும்.என தெரிவித்துள்ளார் .