ஸ்டாலின் தொகுதியில் கிச்சடி– எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Loading

முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சமூகநல விடுதியில் “கிச்சடியை பாயாசம் போல் ஊற்றுகிறார்கள்” என எடப்பாடி பழனிசாமி சாடினார்.

அருப்புக்கோட்டை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:விலையில்லா மின்சாரம், பசுமை வீடுகள் கொடுத்தோம், கைத்தறியில் தொழில்நுட்ப மேம்பாடுக்கு கைத்தறி ஆதரவுத் திட்டம் கொடுத்தோம், கைத்தறி தேங்கியதால் ரிபைட் மானியம் 300 கோடி ரூபாய் கொடுத்தோம்,

நெசவாளர்கள், விவசாயிகள் நலனுக்காக தனது ஆட்சியில் பல திட்டங்களை வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவை தொடரும் என்றும் உறுதியளித்தார்.இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பேரிடர் பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு, பேரிடர் நிவாரணம். அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவர் ஆக 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொடுத்து 2,818 பேர் இலவசமாக படித்து இன்று மருத்துவர் ஆகியுள்ளனர்.

திமுக அரசு நிறுத்திய அம்மா மினி கிளினிக், தாலிக்குத் தங்கம், திருமண உதவி, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம் என்றார்.

அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை நடத்தி நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் போட்டு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கினோம். திமுக அரசும் முதலீட்டாளர் மாநாடு நடத்தியது, ஆனால் அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் கொடுக்கவில்லை. டாஸ்மாக் ஊழல், விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல் குறித்தும் குற்றச்சாட்டுகள் முன்வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சமூகநல விடுதியில் “கிச்சடியை பாயாசம் போல் ஊற்றுகிறார்கள்” என சாடினார்.அதிமுகவில் சாதாரண தொண்டருக்கும் உயர்ந்த பதவிகள் கிடைக்கும், ஆனால் திமுகவில் குடும்பமே ஆதிக்கம் செலுத்துகிறது என்று விமர்சித்தார்.

கல்வி, மருத்துவம், தொழில், கால்நடை உள்ளிட்ட பல துறைகளில் தனது ஆட்சியில் செய்த திட்டங்களை பட்டியலிட்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தும் தொடரும் என்று உறுதியளித்தார்.

0Shares