அக்குபஞ்சர் காந்த காலணிகளை கண்டுபிடித்த மாணவிகள்.. பரிசுவழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

Loading

தேனி மாவட்டம்,பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் (SIDP 3.O) கீழ்
அக்குபஞ்சர் காந்த காலணிகளை (Magnetic Shoes for Accupunture Leg )
கண்டுபிடித்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி பரிசுவழங்கினார்.

தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலத்தில் இன்று (28.07.2025) தொழில்
முனைவோர் மேம்பாடு நிறுவனம் (EDII-TN) மற்றும் பள்ளிக் கல்வி துறை
இணைந்து நடத்தும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் (SIDP 3.O – School
Innovation Development Project) கீழ் அக்குபஞ்சர் காந்த காலணிகளை (Magnetic
Shoes for Accupunture Leg) கண்டுபிடித்து மாநில அளவில் மூன்றாம் இடம்
பிடித்த இராயப்பன்பட்டி செயின்ட் ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்
பாராட்டி காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பள்ளி
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி
புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த
இராயப்பன்பட்டி செயின்ட் ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்
கஃபீனா அமல்ஸ், ஷிவானிஸ்ரீ, சக்திஸ்ரீ, சுபமதி, சாதனா ஆகியோர்
அக்குபஞ்சர் காந்த காலணிகளை (Magnetic Shoes for Accupunture Leg)
கண்டுபிடித்து, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றதைத் தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவிகளைப் பாராட்டி ரூ,25,000/.
காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை மாவட்ட திட்ட
மேலாளர் திரு.மு.சுந்தரேஸ்வரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்
திரு.ராமகிருஷ்ணன், பள்ளி வழிகாட்டி ஆசிரியர் திருமதி நிமலா விண்ணரசி,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares