கவின் ஜோடியானார் பிரியங்கா மோகன்
கவின் ஜோடியானார் பிரியங்கா மோகன்
கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளார் நெல்சன் திலீப்குமார். இயக்குநரைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்க இருக்கிறார் நெல்சன். லிஃப்ட் , டாடா உள்ளிட்ட படங்களில் நடித்த கவின் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சனின் உதவி இயக்குநரான சிவபாலன் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்களின் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி எஸ்.ஜே.சூர்யா இதில் நடித்து வருவதாகவும், மைசூரில் கவின் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவருக்கும் இடையிலான முதல் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.