கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் கியாரா அத்வானி முதலிடம்
கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் கியாரா அத்வானி முதலிடம்
கூகுள் நிறுவனம் அதிகம் தேடப்பட்டபிரபலங்களின் பட்டியலை ஒவ்வொருவருடமும் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2023-ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை கியாரா அத்வானி முதலிடம் பிடித்துள்ளார். அவரின் காதல் கணவர் சித்தார்த்மல்ஹோத்ரா 6-வது இடம் பிடித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த கியாரா அத்வானியும் சித்தார்த் மல்ஹோத்ராவும் இந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் திருமணம் தொடர்பாக, கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது. கியாரா அத்வானியின் வயது, சித்தார்த் வயது,கியாரா அணிந்திருந்த புடவை மற்றும் தாலி உள்ளிட்டவை குறித்து தேடப்பட்டுள்ளதாக கூகுள் சர்ச் ட்ரெண்ட்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.