பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பிறந்தநாள் விழா பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் 

Loading

பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பிறந்தநாள் விழா பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் 
மதுரை பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் அய்யப்ப ராஜா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  ஒத்தக்கடை, உத்தங்குடியில்  ரோஜாவனம் ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை புத்தாடைகள் வழங்கி கொண்டாடினார். தொடர்ந்து கே கே நகரில் அமைந்துள்ள பார்வையற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவுகள்  வழங்கியும், தொடர்ந்து மாவட்ட நீதிமன்றம் அருகே  அமைந்துள்ள யாமிருக்க பயமேன் சட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில்  பிறந்தநாள் விழாவில், 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பிரம்மாண்டமாக கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும்,
அன்பளிப்புகளையும் வழங்கினர், காந்திமியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் திருக்கோயிலில் இருந்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து பரிவட்டம் பூரண கும்ப மரியாதை செலுத்தினர். வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர்கள் முருக கணேஷ், ராமராஜ், அருண் தமிழரசன், மாவட்டச் செயலாளர்கள் ஜெயமுருகன், ராஜா, சுந்தர வடிவேல், ராஜன், ஜீவானந்தம், சுரேஷ்குமார் மற்றும் நூற்றுக்கணக்கான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
0Shares