ரன்பீருடன் அந்த காட்சியில் நடித்ததால் என் பெற்றோர் வருந்தினார்கள்- த்ருப்தி டிம்ரி
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை த்ருப்தி டிம்ரி, “ரன்பீருடன் வரும் நெருக்கமான காட்சிகளில் என் பெற்றோர் சற்று அசவுகரியம் அடைந்தார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு நேரம் எடுத்துக் கொண்டார்கள். இதை நீ செய்ய வேண்டாம், இருந்தாலும் ஓகே என்றார்கள்.
பின்னர் நான் அவர்களிடம், “நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும். அதையே நான் செய்தேன்” என்று புரிய வைத்தேன் என்றார். த்ருப்தி டிம்ரி ‘அனிமல்’ திரைப்படத்தில் ஜோயா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.