மதுரை துணை மேயரை கண்டித்து கொட்டும் மழையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
![]()
மதுரையில் மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர் நாகராஜனை கண்டித்து ஜெய்ஹிந்த் புரத்தில் மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் தலைமையிலும், ஜெய்ஹிந்த்புரம் மண்டல் தலைவர் சீனி செல்வகுமார் மற்றும் மாவட்ட செயலாளர்ர் செண்பக பாண்டியன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மதுரை மாநகராட்சியில் துணை மேயராக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகராஜன் புறம்போக்கு நிலத்தில் 20 அடி தெருவை ஆக்கிரமிய்பு செய்து வீடு கட்டி குடியிருந்து வருகிறார், இதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் புறம்போக்கு நிலத்தை அப்புறப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர், நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் கீரைத்துறை குமார், மீனா இசக்கிமுத்து, மாவட்ட பொது செயலாளர் துறை பாலமுருகன், மாவட்ட பொருளாளர் ராஜ் குமார், மகளிரணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் ஜனா ஸ்ரீ முருகன், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் முரளி பாஸ்கரன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட தலைவர் பாரிராஜா, மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் நவீன் அரசு, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார், பட்டியல் அணி மாநில செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் முருகேஷ் பாண்டியன், பிச்சைவேல், செல்வி கிருஷ்ணன் மற்றும் மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

