பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கொடி ஏற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
![]()
சேலம் வடக்கு மாவட்டம் வீரபாண்டி தெற்கு ஒன்றியம் பைரோஜி ஊராட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கொடி ஏற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பைரோஜில் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் இராம்குமார் தலைமையில் நடைபெற்றது. பாமக மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் பைரோஜி ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி முன்னால் எம்எல்ஏ, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா ஆகியோர்சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்கள். மேற்கண்ட நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிவசங்கரன், பாமக மாவட்ட துணை தலைவர் முருகேசன்,முன்னாள் மாவட்ட துணை தலைவர் சுப்பரமணி,மாவட்ட துணை செயலாளர் பனமரத்துப்பட்டி நரசிம்மன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர்
சிவராமன், மாவட்ட பொருளாளர் கண்ணகி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காவேரி,ஜெயவேலு, நிர்வாகிகள் இராஜா, மாணிக்கம், ரவி,ஆகியோர் கலந்து கொண்டனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திண்ணைப்பிரச்சார குழுக்களை அமைத்து வீடு தோறும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸின் 108 ஆம்புலன்ஸ் திட்டம்,தேசிய சுகாரத்திரத்திட்டம்,சேலம் அதி நவீன மருத்துவமனை கொண்டு வந்தது,இரயில்வே கோட்டம் அமைத்தது,போலீயோ நோய் ஒழித்தது, அனைவருக்கும் இலவச கல்வி,இலவச சுகாதாரம்,வேளாண் இடு பொருட்கள் இலவசம் ஆகியன வற்றையும் எடுத்து கூறி வருகின்ற 2026 ல் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆட்சி அமைய பாடுபடுவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

