மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சி கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார் .

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அவர்கள் நேற்று காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சி கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார், வேலூர் மாநகர் சட்டமன்ற உறுப்பினர்கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர் விஸ்வநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், முனைவர் சேகர் விஸ்வநாதன், ஜிவி செல்வம், துணை வேந்தர் முனைவர் ராம்பாபு, கோடாலி இணை துணை வேந்தர் முனைவர் பார்த்தசாரதி மல்லிக்கு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply