”சமூக நீதி மக்கள் கட்சி” என்ற கட்சியை ஈரோட்டைச் சேர்ந்த வடிவேல் ராமன் புதிய கட்சி தொடங்கினார்
![]()
”சமூக நீதி மக்கள் கட்சி” என்ற கட்சியை ஈரோட்டைச் சேர்ந்த வடிவேல் ராமன் புதிய கட்சி தொடங்கினார்.
கடந்த 40 வருடங்களாக ஈரோட்டை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஜெகஜீவன் ராம் ஜனநாயக மக்கள் இயக்கம் மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை மாவீரன் பொல்லான் பேரவை ஆகிய அமைப்புகளை ஒருங்கிணைத்து.” சமூக நீதி மக்கள் கட்சி ” என்கிற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிறுவனத் தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் அளித்த பேட்டியில்…. டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், புரட்சியாளர் காரல் மார்க்ஸ், ஆகியோரின் வழியில் சமூக நீதி, சமத்துவம், சனநாயகம், கட்சியின் கொள்கையாக செயல்பட்டு வெகுஜன மக்களை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது, தமிழ்நாட்டில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும், முழு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும், அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுள்ள 3% தனி உள் இட ஒதுக்கீட்டை உயர்த்தி 6 சதவீதம் வழங்க வேண்டும், அருந்ததியர் சமூகத்தினரை மட்டும் துப்புரவு பணியாளராக நியமனம் செய்ய தமிழக அரசு தடை விதிக்க வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ஈரோட்டில் சமூக நீதி மாநாடு நடத்துவது எனவும் இந்த மாநாட்டிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைப்பது எனவும்… ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவளித்து தீவிர பிரச்சாரம் செய்வது என சமூக நீதி மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தெரிவித்தார்.

