நாவலைத் தழுவிய படத்தில் ஷான்வி

Loading

நாவலைத் தழுவிய படத்தில் ஷான்விதெலுங்கில் அறிமுகமான ஷான்வி வஸ்தவா, தற்போது கன்னடத்தில் பிசியாக நடித்து வருகிறார். ‘சந்திரலேகா’, ‘மாஸ்டர் பீஸ்’, ‘பலே ஜோடி’, ‘தி வில்லன்’, ‘கீதா’ உள்பட பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது நாகதிஹள்ளி சந்திரசேகர் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இது பிரபலமான ஒரு நாவலைத் தழுவி உருவாகும் படமாகும். பெண்களை மையப்படுத்திய கதைகொண்ட இதில் ஷான்வி ஸ்ரீவஸ்தவா தனி ஹீரோயினாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்படம் நாகதிஹள்ளி சந்திரசேகரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாகும்.
இதில் சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறேன். பிரபலமான நாவலைத் தழுவி இப்படம் உருவாக்கப்படுகிறது. அது எந்த நாவல் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறோம். இதில் நான் வேடிக்கையும், சுறுசுறுப்பும் மிகுந்த பெண்ணாகவும், பின்பு முதிர்ச்சியான அனுபவங்களைக் கொண்ட பெண்ணாகவும் நடிக்கிறேன். முழு படப்பிடிப்பும் சியாச்சினில் நடக்கிறது. படக்குழுவினர் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகிவிட்டனர். நான் எனது கேரக்டருக்காக ஆயத்தமாகி வருகிறேன்’ என்றார்.

0Shares

Leave a Reply