சினிமாவில் 20 ஆண்டுகள்; ரசிகர்களுக்கு த்ரிஷா நன்றி

Loading

அமீர் இயக்கிய ‘மவுனம் பேசியதே’ படம் மூலம் நாயகியானார் த்ரிஷா. அந்தப் படம் ரிலீஸாகி செவ்வாய்க்கிழமை 20 ஆண்டுகள் ஆனது. த்ரிஷா அறிமுகமாகி 20 வருடம் ஆனதை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள த்ரிஷா, “உங்களில் நானும் ஒருவராக இருப்பது குறித்து பெருமைப்படுகிறேன். நமது முன்னோக்கிய பயணத்திற்காக, ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் அனைத்துக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார். த்ரிஷா, இப்போது மோகன்லால் ஜோடியாக ‘ராம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

0Shares

Leave a Reply