டிஸ்டிரிட் மார்ட்சியல் ஆர்ட்ஸ் அகாடமியின் மாவட்ட அளவிலான 12- வது கராத்தே போட்டி:
விங்ஸ் நீலகிரி டிஸ்டிரிட் மார்ட்சியல் ஆர்ட்ஸ் அகாடமியின் மாவட்ட அளவிலான12- வது கராத்தே போட்டி: விங்ஸ் நீலகிரி டிஸ்டிரிட் மார்ட்சியஸ் ஆர்ட்ஸ் அகாடமி தனது 12 – வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டியை குன்னூர் St.செபாஸ்டியன் சர்ச் உள் அரங்கிலவிமர்ச்சியாக நடைபெற்றது.இப்போட்டியில் தனிநபர் கட்டா, தனிநபர் குமித்தே( சண்டை பிரிவு),டீம்கட்டா,குழு கட்டா,ஆகியநான்கு விதமான போட்டிகளில், 40 – க்கும் மேற்பட்ட பிரிவுகள் நடத்தப்பட்டன.இப்போட்டியில் நீலகிரி முழுவதுமிலிருந்து150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.இப்போட்டிக்கு சிறப்பு நடுவர்களாக புனோகோசி சோட்டோகான், ஆர்கனைசேசனின் நிறுவனர் P.K.ராமச்சந்திரன் அவர்களும், சேலத்தை சேர்ந்தகராத்தே ஆசிரியர் M.மாதேஸ்வரன் அவர்களும், விங்ஸ் நீலகிரி டிஸ்டிரிட் மார்ச்ட்சியல் ஆர்ட்ஸ்அகாடமியின் உறுப்பினர்கள், மற்றும் கராத்தே ஆசிரியர்கள் J.அருண்குமார்,S.பசுவையா, ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினர்இப்போட்டிக்குசிறப்பு விருந்தினர்களாக குன்னூர் நகர்மன்ற துணை தலைவர்வாசீம்ராஜா அவர்களும், நீலகிரி மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் சதிஷ் லிங்கன் அவர்களும், நீலகிரி மெட்ரிகுலேசன் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி ரீட்டா டோனி அவர்களும், குன்னூர் நகர்மன்ற கவுன்சிலர்கள் சாகீர் ஹூசைன், மணிகண்டன், ஆகியோரும்,
குன்னுர் முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் பத்பநாபன் அவர்களும்,விங்ஸ் நீலகிரி டிஸ்டிரிட் மார்ட்சியல் ஆர்ட்ஸ் அகாடமியின்
துணை தலைவர் P.மருதமுத்து அவர்களும்,கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, பதக்கங்களை வழங்கி, வாழ்த்தினார்கள முன்னதாக அகாடமியின் பொருளாளர் சென்சாய் B.இணையதுல்லாவரவேற்றார்.முடிவில் அகாடமியின் செயலாளர் ரென்சி M.பழனிவேல் நன்றி உரையாற்றினார்.இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விங்ஸ் நீலகிரி டிஸ்டிரிட் மார்ட்சியஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் செயலாளர் ரென்சி M.பழனிவேல் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.இந்த கராத்தே போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கும்,
மற்றும் மிக சிறப்பாக பயிற்சி அளித்து வரும் விங்ஸ் நீலகிரி டிஸ்டிரிட் மார்ட்சியல் ஆர்ட்ஸ் அகாடமி குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், செய்தி அலசல் நாளிதழ் சார்பாக நல்வாழ்த்துக்கள்.