பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார் .
திருவள்ளூர் டிச 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மற்றும் வட்டார அளவில் நடைபெற்ற கவின்கலை, நடனம், இசை மற்றும் மொழித்திறன் உள்ளிட்ட 207 வகை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை ஆவடி, இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து, பார்வையிட்டு பேசினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் பல்வேறு திறமைகளை கண்டறிந்து போற்றும் விதமாகவும், தமிழ்த் திருநாட்டின் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் விதமாகவும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படும் என்ற சிறப்பு அறிவிப்பினை வெளியிட்டார்.அதன்படி தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பள்ளி மற்றும் வட்டார அளவிலும் நடைபெற்றன. இப்போட்டிகளில் கவின்கலை, நடனம், இசை மற்றும் மொழித்திறனை முதன்மையாகக் கொண்டு வகுப்பு 6 முதல் 8 வரை, 9 முதல் 10 வரை மற்றும் 11 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு மூன்று பிரிவுகளாக 207 வகையான போட்டிகள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் 23.11.2022 முதல் 28.11.2022 வரையிலான நாட்களில் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் இருபதாயிரம் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று, 29.11.2022 முதல் 05.12.2022 வரையிலான நாட்களில் வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஐந்தாயிரம் மாணவர்கள் இம்மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்று மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் 500 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தெரிவு செய்யப்படுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசி மற்றும் கலையரசன் என்ற விருதுகள் தமிழக அரசால் வழங்கப்படும். மேலும், 20 மாணாக்கர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று ஆவடி, இம்மாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 08.12.2022 வரை நாடகம், இசை மற்றும் இசை சார்ந்த போட்டிகள் இம்மாகுலேட் பள்ளியிலும், கவின்கலை மற்றும் நடனம் ளுசுஆ அம்பத்தூர் மேல்நிலைப் பள்ளியிலும், மொழித்திறன் சார்ந்த போட்டிகள் ஆவடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகின்றது. இத்தகைய வாய்ப்புகளை மாணவ, மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி வெற்றி பெறுமாறு கூறினார்.விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையாளர் க.தர்பகராஜ்,துணை மேயர் சூரியகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆவடி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், மாவட்ட ஆய்வாளர்கள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.